சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதில் 2,134 தெருக்களில் 3 முதல் 4 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக நேற்று மட்டும் 1,690 நபர்களிடம் இருந்து மொத்தம் 3,51,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.