19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி நாளை வெஸ்ட்இண்டீஸில் தொடங்குகிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை போட்டி கடந்த 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இறுதிச்சுற்று பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது .இதையடுத்து இறுதியாக கடந்த 2020- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் வங்காளதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அதிகபட்சமாக இந்தியா 4 முறை கோப்பையை வென்றுள்ளது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது.
இந்தநிலையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஐசிசி உலக கோப்பை போட்டி நாளை வெஸ்ட்இண்டீஸில் தொடங்குகிறது. இதில் இந்தியா, வங்காளதேசம் ,பாகிஸ்தான் உட்பட 16 நாடுகள் பங்கேற்க உள்ளன.இதைத்தொடர்ந்து நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணியும் , இதைத் தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து- இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் வருகின்ற 15-ஆம் தேதி மோதுகிறது.