ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது.
ஐரோப்பாவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் இன்னும் சில வாரங்களில் ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியிருப்பதாவது, ஐரோப்பாவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
இன்னும், 6 முதல் 8 வாரங்களுக்குள் ஐரோப்பாவில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே ஐரோப்பா முழுக்க 70 லட்சம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை வைத்து தான் பாதி மக்களுக்கு கொரோனா ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.