இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யாமல் பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டால் 7 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே லேசான அறிகுறி இருப்பவர்கள் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமலும், மிதமான அறிகுறி இருப்பவர்கள் ஆக்சிஜன் உதவி இல்லாமல் தொடர்ந்து 3 நாட்களுக்கு 93% ஆக்சிஜன் அளவு குறையாமலும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
Categories