Categories
மாநில செய்திகள்

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?…. செவிசாய்க்குமா அரசு?…. வெளியான தகவல்….!!!

தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த ஆண்டு தேர்வு முடிந்ததும் குறிப்பிட்ட நிறுவனங்களில் பணி வாய்ப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் பருவத்தேர்வு தள்ளிப் போவதால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இறுதியாண்டு தேர்வு நடைபெறுவதற்குள், பணியில் வந்து செய்வதற்கான காலக்கெடு நிறைவேற்றிவிடுமோ என்று அவர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றுவோர் கூறியது, பொதுவாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியல் மாணவர்களுக்கு மே அல்லது ஜூன் வரை கால அவகாசம் வழங்குவார்கள். தற்போது அவர்களுக்கு அதிகப்படியான ஊழியர்கள் உடனடியாக தேவைப்படுவதால் அவர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பலர் கையில் வேலைவாய்ப்புக்கான அழைப்பாணை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் வெளிநாட்டில் மேல்படிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு இது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |