இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு நாட்டில் 50% முதல் 60% சமையல் எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அந்த பொருட்கள் மீது உள்ள வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என்று காரணமாக கூறப்படுகிறது. சமையல் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் சமையல் எண்ணை விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீது உள்ள வேளாண் உள்கட்டமைப்பு வரியானது 20% இருந்து குறைக்கப்பட்டது. அதாவது இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத பாமாயில் 7.5% குறைக்கப்பட்டுள்ளது. அதனைப்போலவே சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்யில் கால் வரி 5% குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் அடிப்படையான கலால் வரி 12.5%, சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் அடிப்படை கால் வரி 17.5% குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலையானது லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.20 குறையும் என்று மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.