Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு: கூடுதல் தளர்வு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று மருந்துகள், பால் வினியோகம் செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவைக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மின் வணிக நிறுவனங்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |