மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.கே. குச்சிப்பாளையத்தில் பிரபாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நர்சிங் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பிரபாவதி வழக்கம் போல் பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கிருந்த சக மாணவிகளிடம் தான் கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே வந்துள்ளார்.
அதன்பின் பண்ருட்டி-சென்னை சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பால பகுதிக்கு சென்று பாலத்தின் நடுப்பகுதி மேல் ஏறி யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அவர் கீழே குதித்துள்ளார். இதில் பிரபாவதியின் இடுப்பு மற்றும் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியில் சென்றவர்கள் பார்த்து பிரபாவதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பிரபாவதி செல்போன் அதிகமாக பயன்படுத்தி வந்த நிலையில் அதை அவரது அண்ணன் கோபி கண்டித்து விட்டு 2 நாட்களாக தங்கையிடம் பேசாமல் இருந்துள்ளார். பின்னர் அண்ணன் தன்னுடன் பேசாமல் இருந்தால் மன உளைச்சலில் இருந்த அவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.