Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! இந்த மெசேஜ் உங்களுக்கு வருதா?…. அலெர்ட்டா இருங்க….!!!

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்றை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறு கோரி செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை கேட்டு நூதன முறையில் புதிய மோசடி செய்வதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

லிங்க் ஓடிபி மூலம் செல்போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஏதாவது உங்கள் போனுக்கு வந்தால் அதை நம்ப வேண்டாம். லிங்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |