Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்…. மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் அபாயம்?…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று புதிதாக 20,911பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,68,500 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6,235 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தார் எண்ணிக்கை 27,27,960 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 1,03,610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |