நிதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதியினர் உள்பட 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரும்பூரில் காந்தாமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் ஜெயமூர்த்தி என்பவரும் கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வந்த கந்தாமணிக்கு நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஜெயமூர்த்தி, அவரது மனைவி அனிதா மற்றும் கார்த்திகேயன் மனைவி மாலதி ஆகிய 3 பேரும் இணைந்து 4 1/2 லட்ச ரூபாய் பணம் வாங்கி உள்ளனர்.
ஆனால் காந்தாமணிக்கு அவர்கள் சொன்ன படி வேலை எதுவும் வாங்கி தராமல் இருந்துள்ளனர். பின்னர் காந்தாமணி கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு அவர்கள் திருப்பிக் கொடுக்க முன்வரவில்லை. இது பற்றி காந்தாமணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாலதி, அனிதா மற்றும் ஜெயமூர்த்தி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.