Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் … கோரவிபத்தில் பறிபோன உயிர் … சோகத்தில் குடும்பத்தினர் …!!

கார் மோதி ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாட கோட்டை கிராமத்தில் ரேஷன் கடை பணியாளரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்வது வழக்கம். அதைப் போல் நேற்றும் சண்முகம் தனது நண்பரான சின்னையாவுடன்  சேர்ந்து சலுகைச்சாமிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார்  சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகம் மற்றும் சின்னயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி  சண்முகம் பரிதாபமாக  உயிரிழந்துவிட்டார். மேலும்   சினையாவிற்க்கு  மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |