சேப்பக்கிழங்கு ரோஸ்ட்
தேவையான பொருட்கள் :
சேப்பங்கிழங்கு-கால் கிலோ
கடலை மாவு-3 டேபிள் ஸ்பு ன்
அரிசி மாவு-2 டேபிள் ஸ்பு ன்
மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பு ன்
பெருங்காயத் தூள்-அரை சிட்டிகை
தயிர்-2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-தேவைக்கேற்ப
செய்முறை :
சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து குழைந்துவிடாமல் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதில் நறுக்கிய சேப்பங்கிழங்கைப் பிரட்டியெடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மசாலாவில் பிரட்டி வைத்துள்ள கிழங்கைப் போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான மொறு மொறுப்பான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தயிர், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.