டெல்லியில் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட்டுள்ளது.
புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு எங்கிலும் பல்வேறு போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கமாநிலத்தின் சில இடங்களில் இதுவரை இச்சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் ஏற்பட்டுள்ளன.
மேலும்,வியாழக்கிழமை அன்று திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக பீகாரில் இடதுசாரி கட்சிகள் சார்பாக முழு அடைப்பு அறிவித்துள்ளன, மும்பை மற்றும் நாட்டின் பிற இடங்களில் எதிர்ப்பு அணிவகுப்பு நடதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி செங்கோட்டைக்கு அருகே 144-தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி செங்கோட்டை அருகே, 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் அணி திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் சுராஜ்மால் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை காவல்துறையினர் கொடுத்தனர்.
இந்நிலையில் டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றது . போராட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்த போதிலும், போராட்டம் தொடர்ந்து நடக்கின்றது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட்டுள்ளது.