நேற்று போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் காற்று மாசு ஏற்படும் அபாயம் இருப்பதால் சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதற்கு தடை விதித்து மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு போகி பண்டிகையின் போது காற்று தரக்குறியீடு அளவு சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களில் மிதமாகவும், மூன்று மண்டலங்களில் மோசமான அளவுகளாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் (2022) 15 மண்டலங்களிலும் காற்று தரக்குறியீடு திருப்திகரமான அளவுகளில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பொது மக்களிடையே இருந்த விழிப்புணர்வும், டயர், டியூப், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்காமல் ஒத்துழைப்பு தந்ததுவும் இதற்கு முக்கிய காரணமாகும்.
Categories