Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு சார்பில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தலா 1,500, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த 5.63 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2.58 மாணவ மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் பள்ளிகளில் சரியாக பதிவு செய்யப்படாதது தெரியவந்துள்ளது. எனவே பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவ மாணவியரின் விவரங்களை பட்டியலாக தயாரித்து வருகின்ற 25ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறையில் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனருக்கு இ-மெயில் மூலமாக அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |