தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் இயங்காது என்றும் நடப்பு டிக்கெட் வழங்குவதற்கான கவுண்டர் மட்டும் திறந்து இருக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.