Categories
வேலைவாய்ப்பு

149 காலியிடங்கள்…. கரன்சி நோட் அச்சகத்தில் அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவான நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ்ஸில் 149 காலியிடங்கள். ஜனவரி 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பதவி, தகுதி, வயது விவரம்:

தொழிலாளர் நல அலுவலர்: சமூக அறிவியலில் பட்டம் / டிப்ளமோ, எம்.ஏ. சமூகப்பணி / எம்எஸ்டபிள்யு / சமமான டிப்ளமோ, மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும், வயது 18 – 30

சூப்பர்வைசர் (தொழில்நுட்பக் கட்டுப்பாடு / தொழில்நுட்ப செயல்பாடு-அச்சிடுதல்): டிப்ளமோ இன் இன்ஜினியரிங் (பிரிண்டிங்) / பிஇ / பிடெக் / பிஎஸ்சி இன்ஜினியரிங் (பிரிண்டிங்), வயது 18 – 30

மேற்பார்வையாளர் (அதிகாரப்பூர்வ மொழி): ஹிந்தி/ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம், ஒரு வருட மொழிபெயர்ப்பு அனுபவம் (இந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் நேர்மாறாகவும்), வயது 18 – 30

உயர் செயலர் உதவியாளர்: பட்டம், கணினி கல்வியறிவு, ஆங்கிலம் / இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தை ஸ்டெனோகிராபி, ஆங்கிலம் / இந்தியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்தல், வயது 18 – 28

இளநிலை அலுவலக உதவியாளர்: பட்டம், கணினி அறிவு, ஆங்கிலத்தில் 40 வார்த்தைகள் / இந்தியில் 30 வார்த்தைகள் கணினி தட்டச்சு வேகம், வயது 18 – 28

ஜூனியர் டெக்னீஷியன் (பிரிண்டிங் கன்ட்ரோல்): பிரிண்டிங் டிரேடில் ஐடிஐ, ஓராண்டு என்ஏசி சான்றிதழ் (என்சிவிடி), வயது 18 – 25

ஜூனியர் டெக்னீஷியன் (வொர்க்ஷாப்): மெக்கானிக்கல் / ஏர் கண்டிஷனிங் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் டிரேடில் ஐடிஐ, ஓராண்டு என்ஏசி சான்றிதழ் (என்சிவிடி), வயது 18 – 25

தகுதி பற்றிய மேலும் தகவலுக்கு:

https://cnpnashik.spmcil.com

Categories

Tech |