கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலியாக இருக்கும் சாலை ஒன்றில் வரும் பேருந்து, ஒரு குறிபிட்ட இடத்தில் திரும்புவதற்காக நிற்கிறது. சாலையில் வாகனங்கள் வராத நிலையில் பேருந்தின் ஒட்டுநர் வாகனத்தை சாலையில் குறுக்காக கொண்டு வந்து திருப்புகிறார். அப்போது தொலைவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மிக வேகமாக வரும் இளைஞர், பேருந்து சாலையின் குறுக்கே வருவதை கவனிக்கவில்லை. நொடிப்பொழுதில் அவர் கவனிக்கும்போது அவருடைய இருசக்கர வாகனமும், பேருந்தும் அருகருகே சென்றுவிடுகின்றன.
வேகத்தை இளைஞரால் கட்டுப்படுத்த முடியாததால் அதே வேகத்தில் இருசக்கர வளைத்து செல்கிறார். ஆனால் பேருந்தின் ஒட்டுநர் இளைஞர் வேகமாக வருவதை கவனித்து உடனடியாக பிரேக் அழுத்தியதால் அப்போது ஏற்படவிருந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார். பேருந்து ஓட்டுநர் உரிய நேரத்தில் பிரேக் அடிக்காமல் இருந்ததிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும்.
வளைவான சாலையில் அதிவேகத்தில் ஸ்கூட்டியில் வந்த அந்த இளைஞர், பேருந்து கும் சுற்று சுவருக்கும் இடையில் நுழைந்து பிறகு அருகே உள்ள பெட்டி கடை ஒன்றுக்கு மரத்துக்கும் இடையே நுழைந்து உயிர் தப்பினார். இதில் அவரது ஹெல்மெட் கீழே விழுந்த நிலையில் ஸ்கூட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றார். மனதை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Viral video of a young man who was speeding on a scooter and miraculously avoided colliding with a bus that was taking a U-turn near Elyarpadavu, Mangalore. 🚌💨🛵
The scooter then hits the door of the fish processing unit and passed in between a shop and a tree. 😱 pic.twitter.com/c4vAvbbikj
— Mangalore City (@MangaloreCity) January 11, 2022