ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி. இவருக்கு வயது 60. இவர் கடந்த புதன்கிழமை புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்துகொண்டார். விருந்து முடிந்தவுடன், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அவருடன் சேர்ந்து மூதாட்டியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இறுதியில் ஜாரியோ மீது தீ வைத்து கொளுத்தியுள்ளனர். பின்னர் கிராமவாசிகள் அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் புளோரன்ஸ் மற்றும் 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.