Categories
அரசியல் மாநில செய்திகள்

எஸ்பிஜி வேலை அது இல்ல… இது திட்டமிட்டு நடந்தது… அண்ணாமலை அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எந்த தவறுமே செய்யவில்லை என்று சொன்ன பஞ்சாப் மாநில அரசு இந்த பிரச்சனை நடந்து 24 மணி நேரத்தில் பெரோஸ்பூர் எஸ்பிஐ பணிஇடைநீக்கம் செய்துள்ளார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பின் டிஜிபியை மாற்றியுள்ளார்கள். இது எல்லாமே பஞ்சாப் அரசு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏடிஜிபி செக்யூரிட்டி நாகேஸ்வரராவ் இதையெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக இது திட்டமிட்டு செய்துள்ளார்கள், அரசியல் நோக்கத்திற்காக செய்தது போல் தெரிகிறது. பிரதமரிடம் உள்ள எஸ்பிஜியின் வேலை கூட்டத்தை கட்டுப்படுத்துவது கிடையாது. எஸ்பிஜியின் வேலை பிரதமர் பாரத பிரதமர் பேசும்போது வேறு இடங்களில் பாதுகாப்பு கொடுப்பது கிடையாது.

பாரதப்பிரதமர் கடைசில தமிழ்நாடு வந்து ஒரு அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்பது கோயம்புத்தூரில்.. தேர்தலுக்கு முன்னாடி பிப்ரவரி மாதத்தில் எஸ்பிஜி என்பது ஸ்டேஜில் மட்டும் தான் இருப்பார்கள். தமிழ்நாட்டினுடைய காவல்துறை எல்லா இடத்திலும் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |