இறால் சேப்பங்கிழங்கு புளி குழம்பு
தேவையான பொருட்கள் :
இறால்-கால் கிலோ
சேப்பங்கிழங்குகால்- கிலோ
புளி-1 எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம்-3
தக்காளி-1
பச்சை மிளகாய்-2
மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பு ன்
தனியாத் தூள்-1 டேபிள் ஸ்பு ன்
மஞ்சள் தூள்-அரை டீஸ்பு ன்
உப்பு-தேவைக்கேற்ப
சீரக தூள்-அரை டீஸ்பு ன்
வெந்தய பொடி-அரை டீஸ்பு ன்
கடுகு-அரை டீஸ்பு ன்
இஞ்சி பு ண்டு விழுது-1 டீஸ்பு ன்
கறிவேப்பிலை-1 கொத்து
கொத்தமல்லி தழை-1 கைப்பிடி அளவு
தேங்காய் பால்-அரை கப்
எண்ணெய்-தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் வேக வைத்து தோலுரித்து பொpய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இறாலை சுத்தம் செய்து, நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும். தக்காளியை அரைத்து வைக்க வேண்டும்.
வாணலியை காய வைத்து எண்ணெய், கடுகு போட்டு தாளித்து இஞ்சி பு ண்டு விழுதைப் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து அதே எண்ணெயில் எல்லா மசாலா தூள்களையும் போட்டு நன்கு வதக்கவும்.
அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும். பிறகு புளிக்கரைசலை சேர்க்கவும்.
பிறகு இறாலை மூன்றாக நறுக்கி போட்டு, மேலும் கொதிக்க விடவும்.
கடைசியில் வேக வைத்துள்ள சேப்பங்கிழங்கு, தேங்காய் பால், கொத்தமல்லி தழை எல்லாம் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், கூட்டு, தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.