Categories
சினிமா தமிழ் சினிமா

“குக் வித் கோமாளி சீசன் 3” வெளியான தகவல்…. ஏமாந்து போன ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் முக்கியமானது குக் வித் கோமாளி. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது 3வது சீசனுகான ப்ரோமோ ஒளிபரப்பப்பட்டு உள்ளது. எப்போது சீசன் 3 வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த ப்ரோமோ அவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சமீபத்தில் இந்த சீசனில் புகழ் கோமாளியாக பங்கேற்பது கடினம் என்றும் சில எபிசோடுகளில் தான் அவர் வருவார் என்றும் தகவல் வெளியானது.

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை ரக்ஷனுக்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்க இருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. புகழ் மற்றும் ரக்ஷன் இல்லாமல் குக் வித் கோமாளியா என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |