செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் பேசும்போது மிக முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டார். குறிப்பாக நம்முடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சி வந்த பிறகு இந்த ஏழு ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி 45 லிருந்து 69 ஆக உயர்ந்திருக்கிறது.அதே போல நம்முடைய UG மருத்துவ சீட் 6215 லிருந்து 10 ஆயிரத்து 375 ஆக 67 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
அதே போல PG போஸ்ட் கிராஜுவேட் சீட் 2429திலிருந்து நாலாயிரத்து 255 என 75 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்ற அந்த அற்புதமான செய்தியை கூட சொன்னார்.அது மட்டுமல்ல இந்த 11 மருத்துவக்கல்லூரி என்பது இந்திய அளவில் மிகப் பெரிய ஒரு சாதனை. எந்த ஒரு மாநில அரசும் கூட மத்திய அரசோடு இணைந்து ஒரே நேரத்திலே 11 மருத்துவ கல்லூரியை எங்கேயும் கூட திறந்து வைத்ததற்கான வரலாறு கிடையாது.
இதற்கு முன்பாக பாரத பிரதமர் உத்தர பிரதேசத்தில் ஒரே நேரத்தில் அக்டோபர் மாதத்தில் 9 மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். அவருடைய சாதனையை அவரே முறியடித்து, இந்த 11 மருத்துவ கல்லூரியை இன்று திறந்து இருக்கின்றார்.இதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்த நம்முடைய 2 ஆட்சியை கூட நான் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
இதற்கு முன்பாக தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தஎடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவருடைய ஆட்சிக் காலத்தில் இதற்கான பணிகள் வேகம் எடுத்து, இப்போது இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி காலத்தில் இதற்கு திறப்பதற்கு ஒரு வாய்ப்பு. அதனால் இந்த இரண்டு முதல்-அமைச்சருக்கு நன்றியை சொல்லி, பாரத பிரதமரின் கனவு என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட ஒரு மருத்துவக்கல்லூரி அங்கே இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை உடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதுதான்.
அது தமிழகத்திலேயே முழுமையாக நடத்தப்பட்டு இருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் புதிய மாவட்டத்திற்கும் கூட மத்திய அரசு உதவியோடு புதிய மருத்துவ கல்லூரியை துவங்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். நிச்சயமாக மத்திய அரசு பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் தான் இப்போது ஒரே ஒரு மாநிலம். இருக்கக்கூடிய அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கக்கூடிய மாநிலமாக மாறி இருக்கின்றது.