என்ஜினீயர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் என்ஜினீயரான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சித்தார்த் என்ற மகனும், வர்ஷா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்ட வெங்கடேசன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது மூட்டுவலி சரியாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் தனது வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த வெங்கடேசனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.