தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைவிளை பகுதியில் கஞ்சா வியாபாரியான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் மார்த்தாண்டம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.
இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் அஜித்திற்கு அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.