Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த மாணவர்கள்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்களை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள குருநாதகவுண்டர் வீதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் செரங்காடு ஆர்.கே.கார்டன் பகுதியில் வசிக்கும் டார்ஜன் என்பவரது மகன் சரண் சஞ்சய் என்பவரும் திருப்பூர் கே.எஸ்.சி, மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் அவரது நண்பர்கள் 6 பேருடன் பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பரணிதரனும், சரண் சஞ்சயும் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதனை பார்த்த அவர்களது நண்பர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். இந்நிலையில் காப்பாற்ற முடியாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் மற்றும் அவினாசிபாளையம் காவல்துறையினர் தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர். இதனையடுத்து இரவு நீண்ட நேரம் தேடி பார்த்தும் 2 பேரும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து 2-வது நாளாக வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளக்கோவில் அருகில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தீயணைப்புதுறையினர் சடலமாக மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |