தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகிறது. எஸ்.செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை வைத்து உருவாகும் இந்தப் படத்தை எஸ் தாணு தயாரிக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2020ஆம் ஆண்டு சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
அன்று முதல் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்க இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது வாடிவாசல் திரைப்படத்தை பிரபல ஒட்டிடி நிறுவனமான சோனி லைவ் 50 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.