குழந்தைகளுடன் பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேசூர் வெடால் கிராமத்தில் மண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் சென்னை டி.நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு லோகேஷ் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா தனது 2 குழந்தைகளுடன் கடந்த 3-ஆம் தேதி வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் சசிகலா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து மண்ணு அனக்காவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.