Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

தெரு நாய்களை சுடும்போது…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்…. ஹைகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரை சேர்ந்த பாபு என்பவர் எறையூர் பஞ்சாயத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை சுட்டு தள்ளுவதற்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் சின்னத்துரை, தலைவர் குளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து நரிக்குறவரான விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் நாயை குறி வைக்காமல் துப்பாக்கியை கண்மூடித்தனமாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பாபுவின் தாயார் விஜயாவின் காலில் எதிர்பாராதவிதமாக குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா வீடு திரும்பிய மூன்றாவது நாளில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் பஞ்சாயத்து துணைத்தலைவர் சின்னத்துரை, தலைவர் குளஞ்சி, நரிக்குறவர் விஜயகுமார் ஆகியோர் மீது மங்களமேடு காவல் நிலையத்தில் பாபு புகார் அளித்துள்ளார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போது மூவரும் இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளனர். ஆனால் இழப்பீட்டையும் வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். எனவே தமிழக அரசு நாய் பிடிக்கும் போது ஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மனு ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முதலில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை சுட்டுதள்ள உத்தரவிட்டதே சட்டவிரோதம் தான் என்று கூறியுள்ளார். எனவே விஜயாவின் மரணத்திற்கு இழப்பீடாக மூவரும் சேர்ந்து ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படாததால் தமிழக அரசும் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |