Categories
தேனி மாவட்ட செய்திகள்

டாக்டரே வர மாட்டேங்குறாரு…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்…. கால்நடைகளுடன் பங்கேற்றதால் பரபரப்பு….!!

கால்நடை மருத்துவமனை செயல்படாததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தங்களது கால்நடைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடமலைகுண்டுவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர் வராததை கண்டித்தும், கால்நடைகளுக்கு காணை நோய்க்கான தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் பங்கேற்றதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |