செட்டிநாடு சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள் :
சிக்கன்- அரை கிலோ
பெரிய- வெங்காயம் 1
தக்காளி- 3
இஞ்சி பூண்டு -விழுது ஒன்றரை டீஸ்பூன்
கொத்தமல்லித்- தழை ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை- 2 கொத்து
மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள்- அரை டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய்-தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 6
கசகசா – 2 டீஸ்பூன்
தனியா – 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கிராம்பு – 1
பட்டை – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை :
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும்.
சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி!