நாட்டுக் கோழி குழம்பு
தேவையான பொருட்கள் :
நாட்டுக் கோழி- அரை கிலோ
சின்ன வெங்காயம் -15
தக்காளி- 3
தேங்காய் பால்- 1 கப்
மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
மசாலா தூள் –1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் -4 டேபிள் ஸ்பூன்
சோம்பு- 1 டீஸ்பூன்
பச்சை -மிளகாய் 2
கறிவேப்பிலை -1கொத்து
கொத்தமல்லி –தழை ஒரு கைப்பிடி
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். பின்பு தக்காளியை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய பின்பு அவற்றை ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சிறிய துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின்பு மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கிய பின்பு சிறிய துண்டாக வெட்டி வைத்த கோழியை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து கிளறவும். பின்பு அதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும்.
நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
விசில் இறங்கின பிறகு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ் இது.