Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 10கிலோ மீட்டர்…! அந்த இடத்தில் நின்ற மோடி கார்… வேதனைப்பட்ட காங்கிரஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சீக் போர் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு மூலமாக ஜெர்மனியிலிருந்து பாரத பிரதமர் வரும்போது யார் பாரத பிரதமரிடம் அருகில் சென்று அவர்களுக்கு தங்களுடைய செருப்பை காண்பிக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் கொடுப்போம் என்றும் சொல்லி இருந்ததும் கூட அந்த ஸ்டிங் ஆபரேஷன் மூலம் தெரிகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது வெளிநாட்டு சதி நமக்குத் தருவது மட்டுமல்ல, குறிப்பாக பஞ்சாப் மாநில அரசினுடைய கையாலாகாமை நமக்கு தெரிகிறது.  அந்த மாநிலத்தின் முதலமைச்சர், அந்த மாநிலத்தினுடைய டிஜிபி அவர்கள் செய்ய தவறிய கடமை, செய்யத் தவறிய வேலை இந்த ஸ்டிங் ஆபரேஷன் மூலம் நமக்கு தெரிகிறது. அது மட்டும் இல்லை நண்பர்களே இதை விட மிக மிக முக்கியமானது நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் சென்றபோது அப்போது அங்கே டிஜிபி அவர்களோ, தலைமை செயலாளர் அவர்களோ, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அவர்களோ பிரதமரை வரவேற்க வரவில்லை.

அதற்கு மாநிலத்தின் முதலமைச்சர் ஜன்னி அவர்கள்,  எனக்கு பக்கத்தில் இருந்தவருக்கு கொரோனா இருந்த காரணத்தினால் நான் செல்லவில்லை என்று சொன்ன முதலமைச்சர் சாயங்காலம் பத்திரிக்கையாளர்களை தங்களுடைய காரில் அழைத்து சென்று பேட்டியை கொடுப்பதும் கூட நாம் பார்த்தோம்.

இது எல்லாத்தையும் விட மிக வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், பாரதப்பிரதமருடைய காண்பாய் நிறுத்தப்பட்டிருந்த இடம், பாகிஸ்தான் பார்டரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்… இதைத்தான் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தாலும் கூட தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி இருந்தார் என தெரிவித்தார்.

Categories

Tech |