இந்திய அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது .இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்தது. இதனால் 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக 63.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 82 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.