தென்னாபிரிக்காவில் முதல் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்கள் நாட்டில் முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அதிபர் ஜோ பைடன் பல நடவடிக்கைகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரானை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சுமார் 100 கோடி இலவச கொரோனா தொடர்புடைய பரிசோதனைகளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசத்தை அணிய வேண்டும் என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.