உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே கூடிய விரைவில் உக்ரைனை கைப்பற்றுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் இந்த ஹேக்கர்கள் உக்ரைன் நாட்டின் தனிநபர் விவரங்களை பொதுவெளி இணையதளத்தில் பதிவேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து உக்ரைன் அரசாங்கம் கூறியதாவது, ரஷ்யா இதுபோல் பல சைபர் தாக்குதலை ஏற்கனவே நிகழ்த்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்கள்.