Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பாரு…. நிர்வாணமா தூங்கு…. இளம்பெண்ணை டார்ச்சர் செய்த கொடூர கணவர்….!!!!

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அபினாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று மாதம் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு இளம்பெண்ணை அபினாஷ் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும் படியும்,

அந்த வீடியோவில் வரும் காட்சிகள் போல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும், இரவு முழுவதும் நிர்வாணமாக தூங்க வேண்டும் என்றும் இளம்பெண்ணுக்கு அவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு மறுத்த இளம் பெண்ணை அவர் கொடூரமாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் குடி நீருக்கு பதிலாக சிறுநீரைக் குடிக்க வேண்டும் என்று இளம்பெண்ணை அவர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் மனமுடைந்த இளம்பெண் அபினாஷ் செய்து வரும் கொடுமைகள் பற்றிய அவரின் தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இளம்பெண்ணை திட்டிய அபினாஷின் தாய், எனது மகன் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால் சம்பவம் குறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் அபினாஷ் மற்றும் அவரது தாய் மீது போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் அபினாஷ் மற்றும் அவரது தாயார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |