அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை காவல்துறை அதிகாரிகள் சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் ஒரு தாய் 18 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறிக் கதறி அழுது கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட ரோந்து காவலர்கள் அருகில் சென்று பார்த்தபோது ஷாக்காகியுள்ளார்கள்.
ஏனெனில் அந்த 18 மாத குழந்தை மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டிருந்ததுள்ளது. இதனை கண்ட காவல்துறை அதிகாரிகள் குழந்தையை தங்களது ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு மிக வேகமாக சென்றுள்ளார்கள்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காவல்துறை அதிகாரிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்ட அந்த குழந்தைக்கு சி.பி.ஆர் முதலுதவி கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது அந்த குழந்தை மிகுந்த உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.