Categories
சினிமா தமிழ் சினிமா

கடலுக்கடியில் நிக்கி கல்ராணி …. இணையத்தில் செம வைரல் ….!!!

நடிகை நிக்கி கல்ராணி நடுக்கடலில் மீன்களுடன் நீந்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு அவர் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் சசிகுமார் உடன் இணைந்து ராஜவம்சம் படத்தில் நடித்திருந்தார் .

மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கிகல்ராணி  தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடுக்கடலில் மீன்களுடன் நிக்கி கல்ராணி நீந்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில்வைரலாகி  வருகின்றது.

Categories

Tech |