எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் 105 சிறிய ரக சாட்டிலைட்டுகளை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும் பூமியின் சுற்று வட்டப்பாதையில் புளோரிடா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிரான்ஸ்போர்டர்-3 என்ற திட்டத்தின் மூலம் விண்வெளி பயணம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளை சாட்டிலைட் ஆபரேட்டர்கள் பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது.