Categories
தேசிய செய்திகள்

செல்போனை பிடுங்கிய பெற்றோர்…. தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சூரியன்ஷ் என்ற சிறுவன் செல்போனில் ஃபையர் பால் என்ற ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியது மட்டுமல்லாமல் அந்த விளையாட்டில் 6 ஆயிரம் ரூபாயை செலவழித்துள்ளான். இது தெரிய வந்ததையடுத்து சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிறுவனிடம் இருந்து செல்போனை வாங்கி விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்களால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Categories

Tech |