ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சால்காடி என்ற கிராமத்தில் துலார்சந்த் முண்டா (55) என்பவர் வசித்துவருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கி முடங்கிப் போனார். அதனுடன் பேச்சுத் திறனையும் அவர் இழந்துவிட்டார். இந்நிலையில் கோவிஷில்டு தடுப்பூசி செலுத்திய பிறகு அதிசயம் ஒன்று நடந்துள்ளது. அவர் தற்போது எழுந்து நிற்கிறார். நடந்து செல்கிறார். எனது குரல் எனக்கு கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இதனால் சுகாதார அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இது பற்றி மருத்துவர் கூறுகையில், இதனைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். மருத்துவ குழு ஒன்றை அமைத்து அவரது மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். சில நாட்களில் பழைய நிலையிலிருந்து மீண்டால் அது பற்றி புரிந்து கொள்ள முடியும். ஆனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு தடுப்பூசியால் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார் என்பது நம்ப முடியாதது என கூறியுள்ளார்.