Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,070 கிலோ அரிசி பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்து 2,070 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது லாரியில் 46 மூட்டைகளில் சுமார் 2070 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை கடத்த முயன்ற அண்ணா நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கருப்பசாமி பரமக்குடி பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வங்கி அதனை மதுரைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.இதனையடுத்து காவல்துறையினர் கருப்பசாமியை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய செல்வகுமார் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |