Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்க முடியாமல் போகுமோ….? மாணவி எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் எம். ஏ.சி நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவுநீர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |