Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய சாலைகள் அமைத்தால்…. முதல்வர் ஸ்டாலின் திடீர் உத்தரவு….!!!!

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் சென்னையில் தேனாம்பேட்டை, வாரன்ஸ் சாலை மற்றும்மகாலிங்கபுரம் சாலைகளில் நடந்து வந்த சாலை பணிகளை நேற்று சோதனை மேற்கொண்டார் . இவ்வாறு நேற்று இரவு திடீரென்று சாலை பணிகளை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு இருந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது சாலைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. இதை நேரில் பார்வையிட்ட ஸ்டாலின் சாலையின் தரம் பற்றி கேட்டறிந்தார்.

இந்நிலையில் சென்னையில் பழைய சாலைகளை தோண்டாமல் புதிய சாலைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மில்லிங் செய்த பிறகே இந்த சாலை அமைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அறப்போர் இயக்கம் இதுகுறித்து தொடர்ந்து குரல் கொடுத்து சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |