இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு என கணக்கிட்டு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை, 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை என வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டட விதிகளின்படி போதிய வாகன நிறுத்தும் இடம் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதனால் மால்கள், வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.