Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவியின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம்…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருமணமான மணிகண்டன், அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததால் இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி மணிகண்டனின் நடவடிக்கை குறித்து கூறியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |