இன்றைய பஞ்சாங்கம்
16-01-2022, தை 03, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.18 வரை பின்பு பௌர்ணமி.
திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 02.09 வரை பின்புபுனர்பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
காணும் பொங்கல்.
லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
இன்றைய ராசிப்பலன் – 16.01.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால்வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள்வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்டதிட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராகஇருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகலாம். உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின்ஒத்துழைப்பால் அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பழையநண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம்உதவிகள் கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார்உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்புஉண்டு. பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தனுசு
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சி யுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்தஉதவி எளிதில் கிடைக்கும். வெளியூர்பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் உடனிருந்தார்களை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண்பிரச்சினைகள் வரக்கூடும். வீண்செலவு களால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்சுமாராக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.