Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏழை பெண்களுக்கு நிதி உதவி… ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி… அறிக்கை வெளியிட்ட அமைச்சர்…!!

அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன்  ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி மற்றும் தங்கத்தை வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பணம்  மற்றும் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியசந்தாராணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மதன்குமார், மகளிர் அணி அமைப்பாளர் பவானிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் உயர அரசு பல்வேறு  திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் 9000 பேர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். இதில் 2019 ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்த  2 ஆயிரத்து  500 பேருக்கு 8 கோடியே 23 லட்சத்து 25 ஆயிரம் பணம் மற்றும் 16 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்த 6,900 பேருக்கு விரைவில் நிதி மற்றும் தங்கம்    வழங்கப்படும் என அமைச்சர் அந்த அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |